பாடசாலை மாணவர்களுக்கான சீருடை குறித்த புதிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை குறித்த புதிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வவுச்சர்களுக்கு பதிலாக சீருடைத் துணியினை மீளவும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது,

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் முன்வைக்கப்பட்ட முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைக்கு இதன் போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது,

கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவ அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட உள்நாட்டு துணி உற்பத்தியாளர்களின் மூலம் இந்த பாடசாலை சீருடைத் துணிகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது,

அத்துடன் இதற்காக 210 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,

கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை பாடசாலை மாணவர்களுக்கு சீருடைத் துணியே வழங்கப்பட்டு வந்தது,

நல்லாட்சி அரசாங்கத்தினாலேயே சீருடைக்கான வவுச்சர் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like