இறுதிக் கிரியை செய்த உயிரிழந்த மூதாட்டியின் சடலம் வைத்தியசாலையில்!

சாவகச்சேரி – இயற்றாலைப் பகுதியில் உயிரிழந்த மூதாட்டி ஒருவருக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சடலத்தை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம், வரணி இயற்றாலைப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலுப்பிள்ளை நாகி என்ற 87 வயது மூதாட்டி நேற்று காலை குளிக்கச் சென்ற நிலையில் குளத்தின் கரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

குறித்த மூதாட்டியின் மரணம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்காமல் சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று இறுதிக் கிரியைகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, பொலிஸார் சடலத்தை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலை சவச்சாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, மூதாட்டியின் உயிரிழப்பு தொடர்பாக சாவகச்சேரி வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மூலம் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்துமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உடற்கூற்றுப் பரிசோதனையின் அறிக்கை சமர்பித்த பின்னர் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

You might also like