அம்பாறையில் 3 பேர் மரணம்: 400 இற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

அம்பாறை இறக்காமம் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக 3 பேர் உயிரிழந்துடன், 400 இற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வாங்காமம் 10 ஆம் கொலனி முகைடீன் ஜும்ஹா பள்ளிவாசலில் நேற்று முன்தினம் புதன்கிழமை நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது வழங்கப்பட்ட கந்தூரி உணவு ஒவ்வாமையின் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இறக்காமம் மாவட்ட மருத்துவமனையில் மயக்கம் மற்றும் வாந்தி எடுத்தல் காரணமாக 400 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள், 325 பேர் சிகிச்சைபெற்று வெளியேறியதாகவும், 75 பேர் சிகிச்சைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அக்கறைப்பற்று, அம்பாறை, அட்டாலைச்சேனை மற்றும் பாலமுனை மருத்துவமனைகளிலும் நூற்றுக்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like