10 ரூபாய் பணத்திற்காக கொடுமைப் படுத்தி கொலை செய்யப்பட்ட சிறுவன்..!
இந்தியா – ஆந்திராவில் 10 ரூபாய் பணம் கேட்டதற்காக 9 வயது சிறுவன் கொடுமைப்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் பிரகாசம் பகுதியில் வெங்கடராவ் என்ற 9வயது சிறுவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அந்த சிறுவனை தனி அறையில் வைத்து சிகரட் தீயினால் சூடு வைத்தும், ரப்பர் டயர்களால் அடித்தும் நரேந்திரன் என்பவர் கொடுமைப்படுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் சிறுவனின் முகத்தில் நெருப்பை பற்றவைத்து அந்த நபர் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பல மணி நேரும் கொடுமைப் படுத்தியப் பின்னர் சிறுவனை விடுவித்த நரேந்திரன் என்ற அந்த நபர் இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.
பின்னர் அறையில் இருந்து வெளியே வந்த சிறுவனை பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.
ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.