உயிரை மாய்துக் கொள்ள துடிக்கும் இளம் பருவத்தினர்! ஆய்வில் வெளியான உண்மை

இலங்கையில் இள வயதினர் தற்கொலைக்கு முயற்சிப்பதாக உலக சுகாதார அமைப்பின் புதிய ஆய்வு அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

13 முதல் 17 வயது வரையிலான 7 வீதமான இளம் பருவத்தினர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இளம் பருவத்தினரிடையே காணப்படும் மன நலனை விவரிக்கும் அறிக்கையில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் 9 வீதமான இளம் பருவத்தினர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கருதப்படுவதாக குறித்த அறிக்யைில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த 9 வீதமானவர்களில் 5 வீதமானோர் அதிக தனிமை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த அறிக்கையின்படி, 39 சதவீதமான இளம் பருவத்தினர் கடந்த 30 நாட்களில் (ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட திகதிக்கமைய) ஒரு முறை அல்லது அதற்கு மேற்பட்ட முறை துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கைக்கமைய குறித்த 9 வீதமான இளம் பருவத்தினர் அந்த 30 நாட்களுக்குள் புகையிலை போன்றவற்றையும் பயன்படுத்தியுள்ளனர்.

4 வீதமானோர் குறித்த 30 நாட்களுக்குள் ஒரு முறையாவது சிகரெட் புகைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் 69 சதவீதமானோரின் பெற்றோருக்கு அவர்களின் பிள்ளைகள் என்ன செய்துக் கொண்டுள்ளார்கள் என தெரியும்.

இதேவேளை அண்மைய உலக சுகாதார அமைப்பின் ஆய்விற்கமைய 800,000 இலங்கையர்கள் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like