பிறந்த குழந்தையை மண்ணில் புதைத்த கொடூர தாய்

பலங்கொடை பிரதேசத்தில் பெண் ஒருவர் பிறந்த குழந்தையை மண்ணில் புதைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

எனினும் தாய் புதைத்த குழந்தையை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய யுவதி ஒருவர் பலங்கொடை, அளுத்நுவர, கொஸ்உலன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை நேற்று பலங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

புதைக்கப்பட்ட குழந்தையின் சடலமும் நேற்றைய தினம் பலங்கொடை நீதவான் முன் காண்பிக்கப்பட்டது.

சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கணவர் கைவிட்டு சென்ற பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like