கிளிநொச்சி தர்மபுரம் மாதிரி வீட்டுத்திட்ட மக்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு

கிளிநொச்சி தர்மபுரம் மாதிரி வீட்டுத்திட்ட மக்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வு

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மாதிரி வீட்டுத்திட்ட பணிகளில் பா திப் பை எ திர்நோ க்கியு ள்ள மக்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீர்வைப் பெற்றுத் தருவதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உறுதியளித்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த மாதிரி வீட்டுத் திட்டத்தில் பொ ருத்தம ற்ற க ற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, மக்கள் முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த பகுதிக்கு அங்கஜன் இராமநாதன் நேற்று விஜயம் செய்திருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளர் மற்றும் வீட்டுத் திட்டத்துக்கு பொறுப்பான நிறுவனம் ஆகியோருடன் அங்கஜன் இராமநாதன் தொலைபேசி மூலம் கலந்துரையாடியதை அடுத்து ஒரு மாதத்துக்குள் தீர்வைப் பெற்றுத் தருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

குறித்த வீட்டுத்திட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இவ்வாறான கு றைபா டுகள் தொடர்ந்தும் கா ணப்ப டுகின்றமை தொடர்பில் மக்கள் தொடர்ச்சியாக கு ற்ற ம் சா ட்டி வந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற இவ்வாறான குறைபாடுகளுக்கு அந்த அரசாங்கம் ஆட்சியில் இல்லாவிடினும் அரசாங்கம் சார்பாக தான் மன்னிப்பு கோருவதாகவும் அங்கஜன் இராமநாதன் இதன்போது தெரிவித்தார்.

You might also like