சுய தொழில் செய்வோரிற்கு மகிழ்ச்சியான தகவல்! 4% வட்டியில் கடன் திட்டம்

சுய தொழில் செய்வோரிற்கு மகிழ்ச்சியான தகவல்! 4% வட்டியில் கடன் திட்டம்

கூட்டுறவு வங்கிகளூடாக 4 வீத வட்டியில் சுய தொழில்களை மேம்படுத்துவதற்கான கடனை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடனைப் பெற்றுக்கொள்ள தகுதியான பயனாளர்க​ளைத் தெரிவு செய்யுமாறு கூட்டுறவு ஆணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு மற்றும் உள்ளக வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன குறிப்பிட்டார்.

கூட்டுறவு வங்கிகளில் காணப்படும் வைப்பீடுகள் மற்றும் நிதிய பணத்தை பயன்படுத்தி இந்த கடன் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை நாடளாவிய ரீதியிலுள்ள 6000 கூட்டுறவு வங்கிகளூடாக இந்த கடன் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like