கவனிக்கப்படாத பன்னங்கண்டி மக்களின் காணிக்கான போராட்டம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை பதினேழாவது நாளாக தங்களின்  தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர் இவர்கள் தொடர்ச்சியாக பதினேழாவது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற போதும் அவர்களின்  போராட்டம் அரசியல் மற்றும் அதிகாரிகள் தரப்பால் கண்டுகொள்ளப்படவில்லை என பன்னங்கண்டி மக்கள் கவலை  தெரிவித்துள்ளனர்.

ஊடகவியலாளர்கள் மாத்திரம் நாளாந்தம் வருகை தந்து தங்களின்  தங்களின் பிரச்சினைகளையும் உணர்வுகளை  வெளிப்படுத்தி வருகின்றார்கள்,  பன்னங்கண்டி பசுபதிகமம் மக்களின் பிரச்சினையும் ஊடகவியலாளர்களின் முயற்சியனாலேயே தீர்க்கப்பட்டது. அதே போல் எங்களின் பிரச்சினைகளையும் கரிசனையோடு வெளிப்படுத்தி வருகின்றார்கள்.  எனத் தெரிவித்த பன்னங்கண்டி மக்கள்

தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம் மற்றும்   அடிப்படை வசதிகள்  நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன  இதுவரை கிடைக்கவில்லை  எனவே  இவளவு காலமும் அடிப்படை உரிமை  இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம் இனியும் வாழ முடியாது தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை  வழங்குங்கள்  எனக் கோரி இன்று வெள்ளிக்கிழமை பதினேழாவது நாளாக தங்களது தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை  தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம்

அத்துடன்  தமக்கான  காணி உரிமம்  கிடைக்கும் வரை  போராட்டம் தொடரும் எனவும்    மக்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like