இலங்கையின் மிக பெரிய பூங்கா! தரையாக மாறிய கடலில் ஏற்படும் அதிசயம்

இலங்கையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய பூங்காவை அடுத்த மாதம் மக்கள் பாவனைக்காக திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

காலி முகத்திடல் போன்று மூன்று மடங்கு பெரிய பூங்காவை எதிர்வரும் ஓரிரு மாதங்களில் மக்கள் பாவனைக்கு திறக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்படும் இந்த பூங்கா 35 ஏக்கர் சதுர கிலோ மீற்றர் அளவில் நிர்மாணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வடிக்கால் மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பலவிதமான அபூர்வ தாவரங்கள் இங்கு நடப்பட்டுள்ள நிலையில் சிறுவர்களுடன் ஓய்வு பெற கூடிய வகையிலும் ஈர்ப்புகளை ஏற்படுத்தும் வகையிலும் இந்த பூங்கா அமைக்கப்பட்டு வருகின்றது.

கடலுக்கு மேல் மண்ணிட்டு நிர்மாணிக்கப்படும் இந்த பூங்காவில் அனைத்து விதமான ஓய்வு பெறும் வசதிகளும் உள்ள வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

உணவகம், சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகளுக்கு பயணிக்க கூடிய வகையில் இந்த பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடலுக்கு மேல் அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பூங்கா அதிசய நிகழ்வாகும் என பலர் வி யப்பில் ஆ ழ்ந்துள்ளனர்.

You might also like