லீசிங் நிறுவனங்களில் மு றைகேடுகள்: மக்களே அ வதா னம்

நிதி நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்களில் இடம்பெறும் மு றைகே டுகள் மற்றும் ச ட்டவி ரோத செய ற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு நி யமிக்கப்பட்ட மூ வரடங்கிய குழு, பொது மக்களின் கரு த்துகளை கே ட்டறியவுள்ளது.

பொதுமக்களின் கருத்துகள் மற்றும் மு றைப் பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.

இதனை தவிர, குழுவின் பிரதிநிதிகளை சந்திப்பதற்காக மேலதிகமாக 2 நாட்கள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் சட்டத்துறை ஆணையாளர் நாயகம், சட்டத்தணி ஹரிகுப்த ரோஹணதீர (Harigupta Rohanadeera) தெரிவித்துள்ளார்.

மக்கள் இது குறித்த யோசனைகள், கருத்துகள் மற்றும் மு றைப் பாடுகளை இலங்கை மத்திய வங்கி, கொழும்பு – 1 எனும் முகவரிக்கும் அனுப்ப முடியும்.

அத்துடன் கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கான மின்னஞ்சல் முகவரியொன்றையும் தொலைபேசி இலக்கமொன்றையும் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மக்களால் முன்வைக்கப்படும் அனைத்து யோ சைனைகள், மு றைப்பா டுகளையும் ஆராய்வதற்கு ஜனாதிபதி சட்டத்தரணிகள், சிரேஷ்ட வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட ஐவரடங்கிய குழுவொன்றை நியமிக்க எ திர் பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் சட்டத்துறை ஆணையாளர் நாயகம், சட்டத்தணி Harigupta Rohanadeera குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து மத்திய வங்கியில் நாளை (22) நடைபெறவுள்ள தமது குழுக்கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நிதி மற்றும் லீசிங் நிறுவனங்களில் இடம்பெறும் முறை கே டுகள், ச ட்டவி ரோத செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு மூவரடங்கிய குழு அண்மையில் நியமிக்கப்பட்டது.மத்திய வங்கியின் ஆளுநர், பேராசிரியர் W.D. லக்ஸ்மனினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவின் தலைவராக ஜனாதிபதி செயலகத்தின் சட்டத்துறை ஆணையாளர் நாயகம், சட்டத்தணி ஹரிகுப்த ரோஹணதீர செயற்படவுள்ளார்.இலங்கை மத்திய வங்கியின் சட்டத்துறை பணிப்பாளர் K.G.G. சிறிகுமார மற்றும் மத்திய வங்கியின் வங்கிகளற்ற நிதி நிறுவனங்களை முகாமைத்துவப்படுத்தும் பிரிவின் பணிப்பாளர் J.G. கம்லத் ஆகியோர் இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

மத்திய வங்கியில் பதிவுசெய்துள்ள நிதி நிறுவனங்களில் இடம்பெறும் கொ டுக்கல் வாங் கல்களின் போது சமூகத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாத செ யற்பாடுகள் மற்றும் அவற்றை மு காமைத்துவம் செய்வது எவ்வாறு என்பது தொடர்பிலும் இந்த குழு ஆராய்ந்து பரிந்துரை செய்யவுள்ளது.

You might also like