கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற இராணுவத்தினரின் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வு
சித்திரைப்புத்தாண்டு நிகழ்வும், புத்தாண்டையொட்டிய போட்டி நிகழ்வும் இன்று (07) கிளிநொச்சி பூநகரி வாடியடிப்பகுதியில் நடைபெற்றது.
இலங்கை பாதுகாப்பு படைகளின் கிளிநொச்சி படைத்தலைமையகத்தின் 66 படைப்பிரிவும், பூனகரிபிரதேச செயலகமும், பூநகரி பொலிஸாரும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது பாரம்பரிய முறைப்படி தமிழ் சிங்களப் புத்தாண்டு நிகழ்வு நடைபெற்றதுடன், தலையணைச்சண்டை, முட்டியுடைத்தல், சறுக்குமரம் ஏறுதல், கயிறிழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இதில் முதன்மை விருந்தினராக இலங்கை பாதுகாப்பு படையினரின் கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் அஜித்காரிய கரவன, பிரதிப் பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்ன, பூனகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.