யாழ். உட்பட பல இடங்களுக்கும் புகையிரதத்தில் செல்பவர்களின் கவனத்திற்கு

தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு இன்றில் இருந்து விசேட புகையிரத சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம், பண்டாரவளை, மருதானை, மாத்தறை, காலி போன்ற பல இடங்களுக்குமான புகையிரத சேவைகள் தொடர்பான விபரத்தினை இலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படியில்,

கொழும்பு – கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏப்ரல் 12 ஆம் திகதி மற்றும் 17ஆம் திகதிகளில் விஷேட ரயில் சேவைகளும்,

கொழும்பு கோட்டையில் இருந்து பண்டாரவளை நோக்கி ஏப்ரல் 9ஆம் திகதி தொடக்கம் 12ஆம் மற்றும் 16 ஆம் திகதிகளில் காலை 11.30 மணிக்கும்,

கொழும்பு – கோட்டை மற்றும் மருதானையில் இருந்து வெயன்கொட மற்றும் தெற்கு களுத்துறை வரை ஏப்ரல் 14ஆம் திகதி 8 தடவைகள் சேவையும்,

அத்துடன், மஹவ, காலி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளுக்கும் எதிர்வரும் 17ஆம் திகதி விஷேட ரயில் சேவைகளும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், விசேட காலத்தினை கருத்திற்கொண்டு 3600 பேருந்து சேவைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like