நீர்கொழும்பில் சர்வதேச பாடசாலை மாணவனும் மாணவியும் கைது

நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர் ஒருவர் ஜஸ் கிரீம் சாப்பிட பெற்றோரிடம் 200 ரூபாவை பெற்றுக்கொண்டு அதே பாடசாலை மாணவி ஒருவருடன் சில நாட்கள் விளையாட்டு மைதானம் ஒன்றில் தங்கியிருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருடன் மாணவியின் பெற்றோரும் அங்கு சென்றிருந்தனர். இந்த மாணவர்கள் இருவரும் கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் உள்ள பீல்லவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் 15 வயதானவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சில மாதங்களுக்கு முன்னரே இருவரும் அறிமுகமாகிக் கொண்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 2ம் திகதி இரண்டு பேரும் பாடசாலைக்கு செல்வதாக கூறி நீர்கொழும்பு கடற்கரைக்கு சென்றுள்ளதுடன் அங்கிருந்து கடந்த 3ம் திகதியும் 4ம் திகதியும் நீர்கொழும்பு கடோல்கெலே பொது மைதானத்தில் இருந்துள்ளனர்.

மாணவி வீடு திரும்பவில்லை என்பதால், அச்சமடைந்த பெற்றோர் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.முறைப்பாட்டின் அடிப்படையில் நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

மாணவியை பெற்றோரின் சட்டரீதியான பொறுப்பில் இருந்து கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவன் மினுவங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

மாணவி மருத்துவ பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

You might also like