யாழ். மாவட்ட சிகை ஒப்பனை நிலைய உரிமையாளர்களுக்கு ஓர் அறிவித்தல்

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாளை (08) முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரை யாழ்.மாவட்டத்திலுள்ள சிகை ஒப்பனை நிலையங்கள் அனைத்தினதும் நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ். மாவட்ட சிகை ஒப்பனையாளர் கூட்டுறவு சங்கங்களின் ஒன்றியம் வெளியிட்டுள்ளது.

குறித்த நேரக் கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி முதல் மீண்டும் வழமை போன்று காணப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டுப்பாட்டை மீறி செயற்படுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மேற்படி ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like