கிலோமீற்றருக்கு பத்து ரூபாவாக அதிகரிக்கும் பேருந்து கட்டணம்

கொ ரோ னா வை ர ஸ் ப ரவல் காரணமாக இதுவரையில் பேருந்து துறைக்கு பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசாங்கத்திடம் இருந்து எந்தவொரு கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்றால் பேருந்துகள் பயணிக்க முடியாதென சங்கத்தினர் சு ட்டிக்காட்டியுள்ளனர்.

பயணிகள் பேருந்துகள் பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீற்றருக்கும் 10 ரூபாய் கொடுப்பனவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம் ஒன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொ ரோ னா வை ர ஸ் காரணமாக ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றுவதற்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து சங்கம் அதற்கு தொடர்ந்து எ திர்ப்பு வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like