புளியம்பொக்கணை நாகதம்பிரான் வருடாந்த பொங்கல் நிகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சி – கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் எதிர்வரும் 09 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கான வாகனத்தரிப்பிடக் கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் எந்தவிதமான உண்மைகளும் இல்லை என புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், உற்சவ காலத்திற்கான வாகனத்தரிப்பிடங்கள் கட்டணங்கள் தொடர்பில் கரைச்சிப்பிரதேச சபையின் கேள்வி கோரல் மூலமே தீர்மானிக்கப்பட்டுள்ளன எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது பொங்கல் உற்சவத்திற்கான வாகனத்தரிப்பிடங்கள் கரைச்சிப்பிரதேச சபையினால் கேள்வி கோரப்பட்டு பிரதேச சபையினாலேயே முன்னெடுக்கப்படுகின்றது.

ஏனைய ஆலயங்கள் போன்று தரிப்பிட வசதிகள் இல்லாததால் வயல் நிலங்களில் தற்காலிகமாக தரிப்பிடங்களை அமைத்து அவற்றுக்கான பாதுகாப்பு வேலிகள் என்பவற்றை அமைத்து வருடாந்தம் வாகனங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

ஆனால் இம்முறை மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு 50 ரூபாவும் துவிச்சக்கரவண்டிக்கு20 ரூபாவும் என அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You might also like