முகத்தை முழுவதுமாக மூடும் தலைக்கவசம் அணியலாமா?

முகத்தை முழுவதுமாக மறைக்கக்கூடிய தலைக்கவசம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தர நிலை பாதுகாப்பு மற்றும் நாட்டில் நிலவும் சட்டம் போன்ற விடயங்களை அடிப்படையாக கொண்டு இதற்கு தீர்வு வழங்கப்படவுள்ளதாக அனைத்து இலங்கை உந்துருளியாளர்களின் சங்கத் தலைவர் சிரந்த அமரசிங்க தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் சாகல ரத்நாயக்கவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு பிற்பாடு இந்த தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய 10 விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் வெளியிடப்பட்டது.

இந்த அறிவித்தலில் முகத்தை முழுவதுமாக மறைக்கக்கூடிய தலைக்கவசம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like