வெற்றிகரமாக இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணத்தினை ஆரம்பித்த வவுனியா இளைஞன்

இலங்கையில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் ‘அரச ஓய்வூதியம்’ வழங்கி உதவவேண்டும் என தெரிவித்து இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணம் இன்று 08.04.2017 சனிக்கிழமை காலை 08.00 மணிக்கு வவுனியா ஸ்ரீகந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகியது.

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் ஆன்மிக வழிபாடுகளை மேற்கொண்டு ஆலய வளாகத்தில் ஒன்று கூடிய வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்களாக  செ.மயுரன், ஜீ.ரி லிங்கநாதன், தியாகராஜா ,  புளொட் முக்கியஸ்தரும் முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான திருக.சந்திரகுலசிங்கம்(மோகன்) , தமிழ்விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்) , சமுக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராசலிங்கம் , அரச,அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வளர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்து  கொண்டதுடன் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கொடியினை அசைத்து பயணத்தினை ஆரம்பித்து வைத்தார்.

இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ள இன்றைய பயணம் கிளிநொச்சியை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

சுமார் 11நாட்கள் பயணிக்கவுள்ள இவர் 1515 கிலோமீற்றர் தூரத்தினை துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like