பிரதேச செயலக உத்தியோகத்தருக்கு கொ ரோ னா! : சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

பிரதேச செயலக உத்தியோகத்தருக்கு கொ ரோ னா! : சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

பொலனறுவை, லங்காபுர பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொ ரோ னா தொ ற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

லங்காபுர பிரதேச செயலகத்தின் அனைத்து ஊழியர்களையும் எழுமாறாக பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது கிடைத்த பெறுபேறுகளுக்கமைய, இந்த தொ ற்றா ளர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நபர் கந்தகாடு முகாமிலிருந்து அடையாளம் காணப்பட்ட கொ ரோ னா தொ ற்றா ளர் ஒருவருடன் தொடர்பினை கொண்டிருந்தவர் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like