இரண்டு தலை ஆமை… உலகின் பழமையான அபூர்வ ஆமைக்கு சுவிட்சர்லாந்தில் ஒரு புதிய வீடு: ருசிகர தகவல்கள் சில!

இரண்டு தலைகள் கொண்டதால் உலகின் கவனம் ஈர்த்த ஆமை ஒன்றிற்கு சுவிட்சர்லாந்தில் புதிய வீடு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

Janus என்று அழைக்கப்படும் அந்த ஆமைக்கு இரண்டு தலைகள் இருப்பதால், அதனால் மற்ற ஆமைகளைப்போல் தன் தலைகளை ஓட்டுக்குள் இழுத்துக்கொள்ள முடியாது. அதனால், அதை காட்டில் விட்டால் அதற்கு ஆபத்துதான் நேரிடும் என்பதால், அது ஒரு அருங்காட்சியகத்திலேயே வாழ்ந்துவந்தது.

உலகிலேயே நீண்ட நாள் வாழும் Janus என்ற அந்த இரட்டைத் தலை ஆமைக்கு தற்போது ஜெனீவாவின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் ஒரு புதிய இல்லம் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

அதே அருங்காட்சியகத்தில்தான் 23 ஆண்டுகளுக்கு முன் Janus பிறந்தது என்றாலும், அதன் உடல் நலம் சற்று பாதிக்கப்பட்டிருப்பதால், அதை கட்டிடத்தின் மேல் தளத்துக்கு மாற்றியுள்ளதோடு, அதை தனியாக கவனித்துக்கொள்ள ஒரு காப்பாளரும் ஏற்படுத்தப்பட்டுள்ளார்.

முன்பு கஃபட்டேரியா ஒன்றின் அருகில் உள்ள பெரிய தொட்டி ஒன்றில் அது பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

இனி, அதற்காக புதிய தொட்டி ஒன்று உருவாக்கப்பட உள்ளதால், மீண்டும் பார்வையாளர்கள் அதைக் கண்டுகளிக்கலாம்.

You might also like