குறைந்த வருமானம் பெறும் அனைவருக்கும் வீட்டுத் திட்டம்

குறைந்த மற்றும் நடுத்தர வருமானங்களை பெற்று வாழும் மக்களுக்கு வீடுகளை வழங்கி வைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார்.

எனினும் இது குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாண கூட்டுத்தாபனங்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் இது தொடர்பில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன் அடுத்த வருடத்தில் மேற்கொள்ள வேண்டிய இலக்குகளை இந்த வருடத்திலேயே திட்டமிட வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like