யாழில் மாணவி ஒருவர் எடுத்த வி பரீத முடிவு

வீட்டில் தனியாக இருந்த பாடசாலை மாணவி ஒருவர் தூ க்கி ட்டுத் தற்கொ லை செய்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொல்புரம் பத்தானைக்கேணியடிப் பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த குணரத்தினம் விமலவர்ணா (19வயது) என்ற மாணவியே இவ்வாறு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார்.

சுழிபுரம் விக்டோறியா கல்லூரியில் கலைப்பிரிவில் இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள குறித்த மாணவி க.பொ.த சாதாரண தரத்தில் ஒரு சிலபாடத்திற்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு பரீட்சைக்குத் தன்னைத் தயார்படுத்கொண்டிருந்த காரணத்தினால் அவர் கடந்த சில நாட்களாக அவர் பாடசாலைக்குச் செல்லவில்லை, பரீட்சை விண்ணப்பதாளில் கையொப்பம் இடுவதற்கு வருமாறு பாடசாலையின் பரீட்சைக்குப் பொறுப்பான ஆசிரியர் மாணவியின் தந்தைக்கு தொலைபேசியூடாக தெரிவித்திருந்தார்.

மதியம் வீட்டிற்கு வந்த தந்தை கதவினைத் திறக்கும் படி மகளை அழைத்துள்ளார். நீண்ட நேரமாக கதவினை திறக்கவில்லை, அதனால் அவர் மதில் மேல் ஏறி வீட்டிற்குள் சென்று பார்த்த போது மகள் தூ க்கி ல் தொ ங்கி இற ந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்து வி சாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பின்னர் பிரேத பரி சோ தனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டு இன்று சட லம் உறவினர்களிடம் கையளிக்கட்டது.

You might also like