23 ஆண்டுகள் கூட வாழ்ந்த மனைவியை விட்டுவிட்டு காதலியை தேடி சென்ற பிரித்தானிய மூத்த இராணுவ தளபதி

பிரித்தானிய ராணுவத்தின் மூத்த இராணுவ தளபதி ஒருவர், தனது 23 ஆண்டு கால திருமண வாழ்க்கையை உதறிவிட்டு, தனது காதலியைக் காணச் சென்றுள்ளார்.

16 முதல் 20 வயதுள்ள மூன்று பிள்ளைகளின் தந்தையான மேஜர் ஜெனரல் ரூபர்ட் ஜோன்ஸ் (51), தனது மனைவியை விட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் வாழச் சென்றுவிட்டார். அந்த பெண்ணும் ஏற்கனவே திருமணமானவர்.

அவரும் ரூபர்ட்டுக்காக தனது கணவனை பிரிந்துவிட்டார். இந்த விடயம் குறித்து ரூபர்ட் தனது மூத்த அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

என்றாலும், அது அவரது தனிப்பட்ட விடயம் என்று கூறிவிட்ட இராணுவ மூத்த அதிகாரிகள், அவர் ஊரடங்கின்போது, கொரோனா விதிகளை மீறி தனது காதலியைக் காணச் சென்றாரா என்பது குறித்து மட்டுமே தாங்கள் விசாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ரூபர்ட், முன்னாள் போர் ஹீரோ ஒருவரின் மகன், சிறு வயதாக இருக்கும்போதே தன் தந்தை போரில் இறந்துவிட, இளம் வயதிலே ராணுவத்தில் சேர்ந்து மிக இளம் வயதிலேயே பெரும் பொறுப்புகளை ஏற்றவராவார்.

ரூபர்ட், ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பிற்கெதிராக போராடிய பிரித்தானியாவிலேயே மிக உயர்ந்த ஜெனரல் ஆவார்.

ஆகவே, அவரது பொறுப்புக்களை அவர் நிர்வகித்த விதம், இராணுவத்தில் அவர் நடந்துகொண்ட விதம் என தொழில் ரீதியாக அவர் மீது எந்த கருப்புப் புள்ளியும் இல்லை.

அத்துடன், அவர் வெறும் தவறான உறவுக்காக அந்த பெண்ணை தேடிப்போகவில்லை, அவர் புதிதாக காதலில் விழுந்துவிட்டார், அவர் அந்த பெண்ணுடன் தான் தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட முடிவு செய்துவிட்டார் என்று கூறும் ரூபர்ட்டின் மூத்த அதிகாரி ஒருவர், அவர் இது குறித்து தனது மூத்த அதிகாரிகளிடமும் மறைக்காமல் உண்மைகளை தெரிவித்துவிட்டார் என்கிறார்.

மேஜர் ஜெனரல் ரூபர்ட், Northwoodஇல் உள்ள இராணுவ படை ஒன்றின் தளபதியாக உள்ளார். அத்துடன், பிரித்தானியாவின் கடல்கடந்த பிராந்தியங்களின் கொரோனா தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் இராணுவ ஆபரேஷன் ஒன்றின் தலைவராக இருந்தவர் ரூபர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like