இலங்கையில் 5 குழுந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்த தாய்

இலங்கையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை 29 வயது மதிக்கத்தக்க தாயொருவர் பெற்றெடுத்துள்ளார்.

கொழும்பு 08, டி சொய்சா மகளிர் வைத்தியசாலையிலேயே பெபிலியாவல பகுதியைச் சேர்ந்த 29 வயதான தாய், இன்று (வெள்ளிக்கிழமை) காலை, 5 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

வைத்தியசாலையின் துணை இயக்குநர் டாக்டர் புஷ்பா கமலாட்ஜ், இது தாயின் முதல் கர்ப்பம் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், குழந்தைகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அதேநேரத்தில் இயல்பை விட சற்றே குறைந்த எடை கொண்டவர்கள். அவர்கள் வைத்தியசாலையில் குழந்தை பிரிவில் கவனிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like