வவுனியா, மட்டக்களப்பில் உட்பட பல பகுதிகளில் சிலர் காணாமல் போயுள்ளனர்

வவுனியா, மட்டக்களப்பு, களனி மற்றும் கரந்தெனிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்த சில நபர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு சர்வோதய வீதியை சேர்ந்த 47 வயதான கணபதிபிள்ளை குலேந்திரன் என்பவர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தமது கணவர் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக குலேந்திரனின் மனைவியான கோமதி செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெண்ணின் கணவர், மனநோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மட்டக்களப்பு பணிச்சயடி பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான மோகன்தாஸ் மிதுருதுலா என்ற இளம் பெண் காணாமல் போயுள்ளதாக அவரது தாயான மோகன்தாஸ் ஜீவராணி என்பவர் முறைப்பாடு செய்துள்ளாத்.

தனது மகள் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக ஜீவராணி பொலிஸில் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே வவுனியா வவுனியா மணிபுரம் மரக்காரம்பாளை வீதியை சேர்ந்த 14 வயதான புஷ்பராஜா சர்மிளா என்ற சிறுமி கடந்த 4 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.

இது குறித்து காணாமல் போன சிறுமியின் தாய் புஷ்பராஜா புவனேஸ்வரி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதேவேளை களனி லூயீஸ் மாவத்தை சேர்ந்த 30 வயதான பத்திரண ஹேவகே சிறிசோம பியங்கர என்பவர் கடந்த மாதம் 3 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் களனி சிங்ஹாரமுல்ல லியோ வீதியை சேர்ந்த 57 வயதான ஹெட்டியாராச்சிகே சோமரத்ன என்பவர் கடந்த 5 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கரந்தெனிய பனிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த களுவாதேவ லீலாவதி என்பவரின் கணவரான 67 வயதான பத்தினிதேவ மெண்டிஸ் என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போயுள்ள இந்த நபர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிய தருமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது

You might also like