பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 4000 ரூபாவால் அதிகரிப்பு

பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு 4000 ரூபாவால் அதிகரித்து, மே மாதம் முதல் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இடையில் நேற்று பாராளுமன்றில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தாக இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தாம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் கடந்த வருடம் மே மாதம் ஐந்தாம் திகதி அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமும், நிதி அமைச்சின் அங்கீகாரமும் கிடைத்திருந்த நிலையில், பாராளுமன்ற அமைச்சரவை உப குழுவின் அங்கீகாரத்திற்காக விடப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே தற்போது பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு அடுத்த மாதம் முதல் அதிகரித்து வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like