சொந்த மகளையே பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை: அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் 11 வயது மகளை, தந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையால், கடந்த இரண்டு வாரங்களாக பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

இதனால் அச்சிறுமி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.

அதன் பின்னர் இது தொடர்பாக குழந்தைகள் உதவி மையத்தில் புகார் அளிக்கப்பட்டது. குழந்தைகள் நல மையத்தில் இருந்து வந்த அதிகாரிகள், சிறுமியை மீட்டு மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடு்த்தனர்.

கைது செய்யப்பட்ட நபருக்கு அதிகமான குடி பழக்கம் இருந்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சொந்த மகளையே அவரது தந்தை பாலியல் கொடுமை செய்திருப்பது, அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like