இணையத்தில் காதலி வீடியோ! உயிரை மாய்த்த 11 வயது சிறுவன்: நெகிழ வைக்கும் கதை

அமெரிக்காவில் 11 வயது சிறுவன் தனது காதலியின் போலி தற்கொலை வீடியோவை பார்த்து உண்மையென்று நம்பி தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிச்சிகன் மாநிலத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. 11 வயதான Tysen Benz என்ற சிறுவனே காதலிக்காக தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

Tysen Benz காதலித்து வந்த 13 வயது சிறுமி, தான் தற்கொலை செய்துக்கொண்டது போல் ஒரு போலி வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைக்கண்டு உண்மையென நம்பிய Tysen Benz மார்ச் 14ம் திகதி தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். உயிருக்கு போராடிய நிலையில் Tysen Benzயை மீட்ட அவரது தாய் Ms Goss மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த Tysen Benz ஏப்ரல் 14ம் திகதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Tysen Benz தாய் Ms Goss கூறியதாவது, அந்த சிறுமி ஏதற்காக இப்படி ஒரு செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. அவர் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற செயல்களை தடுக்க ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகளிடம் வெளிப்படையாக பேசி பழக வேண்டும் என Ms Goss வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You might also like