வதிவிட விசாவை பெற்றுக்கொள்ள தேவையான ஆவணங்கள் என்ன?

வதிவிட விசா என்பது விசேட கருமங்களுக்காக வதிவிட வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கையரல்லாத ஒருவருக்கு வழங்கும் அனுமதிப் பத்திரமாகும்.

முதலீடு அல்லது வேறு கருமங்களுக்காக வதிவிட வசதிகளை வழங்கத் தீர்மானித்துள்ள இலங்கையரல்லாத வெளிநாட்டவர்களுக்கு இது விநியோகிக்கப்படும்.

அதனைப் பெறுபவர்கள் இலங்கையில் தங்கி இருத்தல் மற்றும் அவர்களின் தொழில்சார் பணிகள் மேற்கொள்ளப்படல், இந்நாட்டு மக்களின் நலனுக்கு பங்கமேற்படுத்தமாட்டாதென உரிய அலுவலர் திருப்தியுறும் வேளைகளிலேயே இவ்வீசா விநியோகிக்கப்படும்.

அந்த வகையில் முன்னாள் இலங்கையருக்கு வதிவிட விசா..

வதிவிட விசா விண்ணப்பப் பத்திரத்தை நான் எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்?

 • கொழும்பு, குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.

வதிவிட விசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது?

 • உங்களின் விசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.

வதிவிட விசா விண்ணப்பப் பத்திரத்துடன் நான் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?

 • பிறப்புச் சான்றிதழ்
 • பிரசாவுரிமைச் சட்டத்தின் 5(2) பிரிவின் கீழான பிறப்புப் பதிவு
 • பதிவு செய்தல் மூலமாக பிரசாவுரிமை பெற்றிருப்பின் பிரசாவுரிமைச் சான்றிதழ்
 • விவாகச் சான்றிதழ்
 • தங்கி வாழ்வோரின் விவாகச் சான்றிதழ்

வதிவிட விசாவின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு?

 • உங்கள் வதிவிட விசாவின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடமாகும்.
 • அதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

வதிவிட விசா அனுமதிப் பத்திரத்தை எவ்வாறு புதுப்பித்துக் கொள்ளலாம்?

 • கால நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரத்தை குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வதிவிட விசா புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திர மாதிரியை எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம்?

 • கொழும்பு, குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.
 • விண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.

வதிவிட விசா புதுப்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகள் யாவை?

 • உங்களின் பயண ஆவணங்கள் காலாவதியும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைதல் வேண்டும்.

அமைப்பு பற்றிய தகவல்..

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்
இல. 41, ஆனந்த ராஜகருனா மாவத்தை, கொழும்பு 10.
தொலைபேசி:+94-11-5329000
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2885358
மின்னஞ்சல்:controller@immigration.gov.lk
இணையத்தளம்: www.immigration.gov.lk

You might also like