வவுனியாவில் தண்ணீரை வடிக்க சொன்ன கிராம சேவையாளர் : பரபரப்பை ஏற்படுத்திய விடயம் – வெளியான ஓடியோ

தண்ணீரை வடித்து எடுத்துட்டு இருங்கோ என தெரிவித்த கிராம சேவையாளர் மீது வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தினால் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வவுனியா கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழையுடான காலநிலை நீடித்து வருகின்றது. இதன் காரணமாக மாவட்டத்தில் 40க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 60க்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 160க்கு மேற்பட்டவர்கள் பா திப்படைந்துள்ளனர்.

இந் நிலையில் மழை காரணமாக வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள சில வீடுகளில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியினை சேர்ந்த பொதுமகனோருவர் பரசங்குளம் கிராமத்திற்கு பொறுப்பான கிராம அலுவலருக்கு இவ்விடத்தினை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளனர்.

அதன் போது குறித்த பகுதி கிராம சேவையாளர் அசமந்தபோக்காக தண்ணீர் எல்லாத்தையும் வடித்து எடுங்கோ எடுத்து இருங்கோ, வேற என்ன விசயம் என தெரிவித்துள்ளார். கிராம சேவையாளரின் இவ் அசமந்தபோக்கான கருத்து காரணமாக மக்கள் மனவே தனையில் இருந்தனர்.

இந் நிலையில் கிராம சேவையாளருடனான உரையாடல் ஒளிப்பதிவு தற்போது வெளியாகியுள்ள நிலையில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தினால் அவ் கிராம சேவையாளர் மீத விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

You might also like