கழுத்தினை வெட்டி ஒருவர் படுகொலை : 7 வருடங்களின் பின் சந்தேக நபர் கைது

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிட்டிகல பிரதேசத்தில் நபர் ஒருவரை கழுத்தை வெட்டி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில், கடந்த 7 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேகநபரே கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர் தல்கஸ்வல பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த நபரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த கொலை சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like