அதிரடிப்படையினரால் கிளிநொச்சியில் கஞ்சா மீட்பு – ஒருவர் கைது

கிளிநொச்சி பொலிஸ்  விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக

இன்று மாலை பரந்தன் சிவபுரம் உண்டியல் சந்திக்கு  அருகில் வைத்து கஞ்சாவுடன் சென்ற இளைஞன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள்ளார்.

கறுப்புநிற பை ஒன்றினுள் கஞ்சாவினைக்  கொண்டு  குறித்த பகுதியில்  நடந்து சென்றுகொண்டிருந்த வேளை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்  குறித்த இளைஞன் வயல் வெளியினூடு ஓடுவதற்கு முற்ப்பட்ட வேளை  மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாவும் அவரிடம் இருந்து சுமார்  நான்குகிலோ    கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடிப்படை வட்டாரங்கள்  தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் குறித்த பகுதியில்  வெடிச்சத்தம்  கேட்டதாகவும் மேல்வெடி வைத்தே குறித்த இளைஞனை  கைது  செய்திருக்க வேண்டும்  என அக்கிராம மக்களால் தெரிவிக்கப்படுகின்ற போதும்  விசேட அதிரடிப்டையினாரால் அது மறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட  சந்தேகநபரையும் மீட்கப்பட்ட  கஞ்சாவினையும்  சற்றுமுன் கிளிநொச்சிப் பொலிஸ்  நிலையத்தில்  அதிரடிப்படையினர்  கையளித்து  உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like