மரக்கறி மற்றும் தேங்காயின் விலை உயர்வு

நாட்டில் மரக்கறி வகைகள் மற்றும் தேங்காயின் விலை உயர்வடைந்துள்ளது.
இதன்படி ஒரு தேங்காயின் விலை 90 ரூபா முதல் 100 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

தேங்காய் உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மரக்கறி வகைகளின் விலைகளும் 15 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

கரட், லீக்ஸ், போஞ்சி மற்றும் கோவா போன்ற மரக்கறி வகைகள் கிலோ ஒன்று 100 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

போதியளவு மரக்கறி வகைகள் சந்தையில் கிடைக்கப் பெறாமையினால் இவ்வாறு விலை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like