விவசாயிகளுக்கு 50 கிலோகிராம் உரைப்பையை 500 ரூபாவுக்கு கொடுக்க தீர்மானம்!

விவசாயிகளுக்கு

2020 – 2021 ஆண்டு காலப்பகுதிக்கான பெரும்போக பயிர்ச்செய்கைக்கான உரத்தை பற்றாக்குறையின்றி விநியோகிக்க துரித நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நெல் விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்கும் செயற்றிட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவும், சூழலுக்கு உகந்த உரத்தை பாவிப்பதற்கு நெல் விவசாயிகளை ஊக்குவிக்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன், 2020 – 2021 ஆண்டு காலப்பகுதிக்கான பெரும்போக பயிர்ச்செய்கைக்காக 2 இலட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் தொன் உரத்தை அரச உர நிறுவனத்தின் ஊடாக விரைவாக இறக்குமதி செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும், 2020 – 2021 ஆண்டு காலப்பகுதிக்கான நெற்செய்கை தவிர்ந்த ஏனைய பயிர்ச் செய்கைகளுக்காக 3 இலட்சத்து 32 ஆயிரம் மெட்ரிக் தொன் உரம் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உர நிறுவனங்களிடம் காணப்படும் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் உரத்தை கவனத்திற் கொண்டு, எஞ்சிய 3 இலட்சம் மெட்ரிக் தொன் இறக்குமதிக்காக தனியார் உர நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, நெற்செய்கை தவிர்ந்த ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கு தேவையான 50 கிலோகிராம் உரப்பை ஒன்றை விவசாயிகளுக்கு ஆயிரத்து 500 ரூபாவுக்கு பெற்றுக் கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like