பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு 3152 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு 3152 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

106 வகை புத்தகங்களை அச்சிடுவதற்கு அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு 1093.71 மில்லியன் ரூபாவும், 294 வகை புத்தகங்களை அச்சிடுவதற்கு தனியார் துறையினருக்கு 2059.01 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஆண்டில் சுமார் 400 வகை பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like