யாழில் வேலையற்ற பட்டதாரி மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் மருதங்கேணி பகுதியில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருதங்கேணி பகுதியில் புடவைக் கடை நடத்தி வந்த வேலையற்ற பட்டதாரி ஒருவர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

32 வயதான தவராசா நிமல்ராஜ் என்பவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்திருந்த போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, 119 என்ற அவசர இலக்கத்திற்கு வழங்கிய முறைப்பாட்டை தொடர்ந்தே குறித்த பகுதிக்கு பொலிஸார் வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

You might also like