அதிக விலைக்கு தேங்காய் விற்க வேண்டாம்! அரசாங்கம் விடுத்துள்ள உத்தரவு

தேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபாயாக இருக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்த விலையை விட அதிக விலைக்கு தேங்காய்களை விற்பனை செய்பவர்களுக்கு எ திராக சட்டம் அமுல்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அமைச்சில் இன்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

நிர்ணய விலையை விட அதிக விலைக்கு தேங்காய் விற்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, மக்களுக்கு சலுகை விலையில் தேங்காய்களை வழங்க அமைச்சகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது 60 ரூபாய்க்கு தேங்காய் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like