சற்று முன் வவுனியாவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கில் விபத்தில் : பெண் காயம்

சற்று முன் வவுனியாவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கில் விபத்தில் : பெண் காயம்

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கில் விபத்தில் பெண்ணோருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (02.10.2020) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரிலிருந்து ஏ9 வீதியூடாக தாண்டிக்குளம் பகுதியினை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்க்கரவண்டி ஏ9 வீதி – விவசாயத்திணைக்களத்திற்கு முன்பாக வீதியின் மறுபக்கம் திரும்ப முற்பட்ட சமயத்தில் முச்சக்கரவண்டிக்கு பின்பக்கமாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கில் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் இரு வாகனங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிலின் சாரதியான 35வயது மதிக்கத்தக்க பெண் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதுடன் விபத்துக்குள்ளான இரு வாகனத்தினையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.

You might also like