சற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து : சாரதி உட்பட பலர் காயம்

சற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து : சாரதி உட்பட பலர் காயம்

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று (03.10.2020) மதியம் 3.00 மணியளவில் இடம்பெற்ற இ.போ.ச பேரூந்து விபத்தில் சாரதி உட்பட பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலைக்கு சொந்தமான பேரூந்து இன்று மதியம் 12.45 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணத்தினை ஆரம்பித்திருந்தது. மதியம் 3.00 மணியளவில் மாங்குளம் பகுதியினை அண்மித்த சமயத்தில் (மாங்குளம் சந்தியில்) பேருந்தின் சாரதிக்கு திடீரேன ஏற்பட்ட சுகயீனம் காரணமாக பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து முன்பாக வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் பேரூந்து மோதுண்டதுடன் வீதியின் அருகேயுள்ள பாலத்துடன் மோதுண்டது.

மேலும் பேரூந்துடன் மோதுண்ட முச்சக்கரவண்டி அருகேயிருந்த முச்சக்கரவண்டி தரிப்பிடத்திலுள்ள மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. அத்துடன் மரக்கொப்பு உடைந்து வீழ்ந்ததில் முச்சகரவண்டி தரிப்பிடத்தில் நின்ற ஒர் முச்சக்கரவண்டியும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இவ்விபத்து சம்பவத்தில் பேரூந்தின் சாரதி உட்பட பேருந்தில் பயணித்த 10க்கு மேற்பட்டவர்கள் சிறுகாயங்களுடன் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த மாங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like