புங்குடுதீவில் கொரோனா வைரஸ்? மினுவாங்கொடயில் இருந்து வந்த பெண்களால் ஆ பத்து

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டம் மினுவாங்கொடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் இரு பெண்கள் புங்குடுதீவிற்கு திரும்பியமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

புங்குடுதீவு 12ஆம் வட்டாரம் பகுதியில் வசிக்கும் பெண்கள் இருவர் மினுவாங்கொடையில் இருந்து கடந்த வாரம் ஒருவரும் நேற்று முன்தினம் மற்றுமொருவரும் புங்குடுதீவில் உள்ள தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் இருவரும் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

புங்குடுதீவிலுள்ள குறித்த பெண்களின் வீட்டுச் சூழலில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் ஒன்றுகூடியுள்ளனர்.

தீவிர விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில் அந்தப் பகுதி அபாய பகுதியாக அறிவிக்கப்படக்கூடும் என்றும் மக்களை சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

You might also like