யாழில் கொரோனா பரவல்? : அரசாங்க அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழில் கொரோனா பரவல்? : அரசாங்க அதிபர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

மினுவாங்கொடையில் உள்ள தனியார் ஆடைதொழிற்சாலையில் தொழில் புரியும் யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 7 பேர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது அவர்களில் இரண்டு பேர் புங்குடுதீவுக்கு கடந்த நாட்களில் வந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரை தொடர்பு கொண்டு நாம் வினவினோம்.

இதன்படி, குறித்த 7 பேரும் மினுவாங்கொடை பகுதியிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை எனவும் உறுதிப்படுத்தினார்.

மேலும் போலித்தகவல்களை பரப்ப வேண்டாமெனவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் கோரிக்கை விடுத்தார்.

You might also like