வவுனியாவில் களவாடப்படும் ஆடு , மாடு : அதிரடியாக 5 இளைஞர்கள் கைது

வவுனியாவில் களவாடப்படும் ஆடு , மாடு : அதிரடியாக 5 இளைஞர்கள் கைது

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆடு , மாடுகளை களவாடிய 5 இளைஞர்களை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பண்டாரிக்குளம் பகுதியில் மாடொன்றும் மகாறம்பைக்குளம் பகுதியில் பெரிய இன ஆடோன்றும் காணாமல் போன நிலையில் அவற்றின் உரிமையாரினால் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுனில் சாந்த அவர்களின் வழிகாட்டலில் அமைக்கப்பட்ட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதன் போது தேக்கவத்தை பகுதியிலுள்ள வீடோன்றில் சட்டவிரோதமான மாட்டியினை வெட்டிய குற்றச்சாட்டில் அதே பகுதியினை சேர்ந்த 21,22 வயதுடைய இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த பண்டாரிக்குளத்தில் மாட்டடினை களவாடியதாக வாக்குறுதியளித்தனர்.

அத்துடன் மகாறம்பைக்குளத்தில் பெரிய இன ஆட்டினை விற்பனை செய்த சமயத்தில் மகாறம்பைக்குளம் பகுதியில் வைத்து அதே பகுதியினை சேர்ந்த 27,28,29 ஆகிய வயதுகளை சேர்ந்த மூன்று இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த மகாறம்பைக்குளத்தில் ஆட்டைனை களவாடியதாக வாக்குறுதியளித்தனர்

கைப்பற்றப்பட்ட மாட்டின் இறைச்சி மற்றும் ஆடு ஆகியவற்றினையும் ஜந்து சந்தேகநபர்களையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குறிய நடவடிக்கையினை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like