வவுனியாவில் தனிமைப்படுத்தலில் குடும்பமொன்று; குறித்த பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு பொலிஸ் அறிவித்தல்!

வவுனியாவில் தனிமைப்படுத்தலில் குடும்பமொன்று; குறித்த பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு பொலிஸ் அறிவித்தல்!

வவுனியா தோணிக்கல் ஆலடிப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றினை அண்மையில் சந்தித்து சென்ற ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அக்குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந் நிலையில், அக் குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குறித்த பகுதிக்கு மக்களை செல்லவேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

தோணிக்கல் ஆலடிப்பகுதியில் புகையிரத கடவைக்கு அருகாமையில் சிறிய கடையொன்றினை நடத்தி வரும் குடும்பமொன்றே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையும் இன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like