முதலாவதாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா தொற்றியது எப்படி? கணவர் வெளியிட்ட தகவல்
முதலாவதாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா தொற்றியது எப்படி? கணவர் வெளியிட்ட தகவல்
கம்பஹா – திவுலபிட்டி பகுதியில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட பெண்ணுக்கு அவர் பணிபுரியும் தொழிற்சாலைக்குள் வைத்தே கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இந்த தகவலை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
காலி – ஹபராதுவ பொலிஸ் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்திலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
தனது மனைவிக்கு ஆடைத் தொழிற்சாலையைத் தவிர வேறு எந்தவொரு இடத்தில் வைத்தும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கவில்லை.
குறித்த தொழிற்சாலைக்குள் வைத்தே கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.