திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளி கட்டிடத்திறப்புவிழாவும் கௌரவிப்பு நிகழ்வும்
வவுனியா திருநாவற்குளம் முன்பள்ளி கட்டிடத்திறப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று (09.04.2017) காலை 10.00மணியளவில் முன்பள்ளி அதிபர் மீரா குணசீலன் தலமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக தர்மலிங்கம் சித்தார்த்தன் ( பாராளுமன்ற உறுப்பினர்.யாழ் மாவட்டம்) , சிறப்பு விருந்தினர்களாக க.சந்திரகுலசிங்கம் மோகன் ( முன்னான் நகரசபை உப தலைவர்) , ஜீ.ரி லிங்கநாதன் ( வடமாகாண சபை உறுப்பினர்) , தமிழ்மணி அகளங்கன் ( தலைவர் – கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்) , அருள்வேல்நாயகி ( முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர்) , யோகநாதன் ( கிராம சேவையாளர் – தாண்டிக்குளம்) , விக்னபவானந்தன் ( செயலாளர்,சிவன் கோவில்) , கௌரவ விருந்தினர்களாக கஜேந்திர சர்மா ( ஆலய குரு, வேப்பங்குளம்) , ஜெகதீஸ்வரன் ( நிர்வாக உறுப்பினர் – ஜனநாயக மக்கள் விடுதலை முன்னனி) , யோகன் ( தேசிய அமைப்பாளர்) , ஸ்ரீகேசவன் ( இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்) , பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தர்மலிங்கம் சித்தார்த்தன் ( பாராளுமன்ற உறுப்பினர்.யாழ் மாவட்டம்) கட்டிடத்தினை திறந்து வைத்ததுடன் மாணவர்களின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. இதன் போது 2016ம் ஆண்டு புலமைப்பரிட்சை, 2015ம் ஆண்டு க.போ.த சாதாரண பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் ஆசிரியர் கௌரவிப்பு, ஆற்றலரசி மாணவர்களுக்காக கௌரவிப்பு, கண்ணன் நடனம், வினோதஉடை என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.