வவுனியாவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனியார் கல்வி நிலையங்களுக்கு பூட்டு

வவுனியாவில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனியார் கல்வி நிலையங்களுக்கு பூட்டு

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் நோய்த்தாக்கம் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் வவுனியாவிலுள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களை மூடுமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவிட் நோய்த்தாக்கம் காரணமாக நாட்டில் கம்பஹா, கிரிந்திவெவல, தொம்பே, பூகொட, கனேமுல்ல, வீரகுல, வெலிவேரிய, மல்வத்துஹிரிபிட்டிய, நிட்டம்புவ, மீரிகம, பல்லேவெல, யக்கல, ஜாஎல மற்றும் கந்தான ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாடசாலை விடுமுறையினையடுத்து வவுனியாவிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் காலை மாலை என இரு நேரங்களிலும் வகுப்புக்களை முன்னெடுத்து வருகின்றனர்.

கோவிட் நோய்த்தாக்கத்தினை கட்டுப்படுத்தும் முகமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரும் வரை வவுனியாவிலுள்ள அனைத்து பாடசாலையும் மூடுமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்தார்.

You might also like