ராகம வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி – பொது போக்குவரத்தில் சென்றதாக தகவல்

ராகம வடக்கு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொ ரோனா நோ யாளி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

நேற்று இரவு இந்த கொரோனா நோ யாளி வைத்தியசாலையில் இருந்து த ப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து த ப்பிச் சென்றவர் பேலியகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நோ யாளி கண்டுபிடிக்கும் தீ விர நடவடிக்கையில் பா துகாப்ப தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த நோயாளி பொது போக்குவரத்தினை பயன்படுத்தி தனது வீட்டிற்கு சென்றுள்ளதாக முதற்கட்ட வி சாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கொரோனா தொ ற்றியமை தெரிந்திருந்தும் குறித்த நபர் தனது உறவினர் வீட்டில் ஒரு சில நாட்கள் தங்கியிருந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அவரது வீடு பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ளதாக கொ ரோனா நோ யாளியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் குறித்த குடும்பத்தினரை தனிமைப்படுத்துமாறு சுகாதார பரிசோதகர்கள் ஆலோசனை வழங்கவில்லை என தெரியவந்துள்ளது.

குடும்பத்தினர் தற்போது வரையிலும் சுதந்திரமாக வெளியே சுற்றித் திரிவதாக குற் றம் சாட்டbப்பட்டுள்ளது.

You might also like