இலங்கையில் தற்காலிகமாக மூடப்படும் நிறுவனங்கள் எவை? திருமண நிகழ்வுகளுக்கு அனுமதியா? புதிப்பிக்கப்பட்ட வரைவு

இலங்கையில் தற்காலிகமாக மூடப்படும் நிறுவனங்கள் எவை? திருமண நிகழ்வுகளுக்கு அனுமதியா? புதிப்பிக்கப்பட்ட வரைவு

எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் வகையில் சுகாதார வழிக்காட்டு ஆலோசனைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் கீழ் வரும் தீர்மானங்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.

பேருந்து மற்றும் தொடருந்துகளில் ஆசன அளவுக்கு அமையவே பயணிகளை ஏற்ற வேண்டும்.

திருமண வைபவங்களுக்கு கூடிய பட்சமாக 200 விருந்தினர்கள் மாத்திரமே அழைக்கப்பட வேண்டும் என்பது சுகாதார பாதுகாப்பு முறையை கடுமையாக பின்பற்ற வேண்டும்.

உள்ளக, வெளியரங்க விருந்துகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாடங்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

மதிய நேர பராமரிப்பு நிலையங்கள், பாடசாலைகள், முன்பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் உட்பட உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் பகுதி நேர வகுப்புகள் மூடப்படும்.

மதுபான விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும், எனினும் கடும் சுகாதார பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

திரையரங்கங்கள், கெசினோ சூதாட்ட நிலையங்கள், இரவு நேர களியாட்ட விடுதிகள், பந்தைய நிலையங்கள், மதுபான விடுதிகள் என்பன மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like