இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளிடம் வைரஸ் செறிவு அதிகம்! மிகப் பயங்கரமான நிலை என்று எச்சரிக்கை

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளிடம் வைரஸ் செறிவு அதிகம்! மிகப் பயங்கரமான நிலை என்று எச்சரிக்கை

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்படும் நோயாளிகளிடம் வைரஸ் செறிவு அதிகளவான மட்டத்தில் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் அறிய கிடைத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதானிகளில் ஒருவரான மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

தனியார் சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் மருத்துவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் அடையாளம் காணப்பட்ட சகல நோயாளிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்றிய மூலத்தை கண்டுபிடிக்க முடிந்தது. எனினும் தற்போதைய பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா தொற்றியது என்பது குறித்த சரியான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. இது மிகவும் பயங்கரமான நிலைமை.

சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் பரவாது என்றே இதுவரை நாம் கூறி வந்தோம். இந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் எப்படி தொற்றியது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், ஆடைத் தொழிற்சாலைக்குள் அல்லது சமூகத்திற்குள் இருந்து அவருக்கு கொரோனா பரவி இருக்கலாம். இந்த ஆபத்து பற்றி நாங்கள் சுட்டிக்காட்டினோம். இதனால், இந்த சம்பவத்தில் முழுமையாக என்ன நடந்தது என்பது நாட்டுக்கு வெளியிடப்பட வேண்டியது முக்கியம்.

அதேபோல் நான் நேற்றைய தினம் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் உரையாடினேன். குறித்த பெண்ணுக்கு போல் புதிதாக கண்டறியப்பட்டுள்ள 800 நோயாளிகளில் உடலில் அதிகளவான மட்டத்தில் வைரஸ் செறிவு காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

உடலுக்கு அதிகளவில் வைரஸ் இருப்பதானது இதுவரை இலங்கைக்குள் இருந்த வைரசில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் ஊடாக ஒரு நபரிடம் இருந்து சிலருக்கு நோய் பரவக் கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது என்பதே இங்குள்ள ஆபத்தான நிலைமை. இதனால், நாம் சரியான முறையில் இதனை முகாமைத்துவம் செய்ய வேண்டும் எனவும் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.

You might also like